பேஸ்புக்கில் விலைப்பட்டியலுடன் சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்த இளம்பெண்!

woman-held-for-posting-girl-picture-with-price-tag-on-social-media

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிப்பவர் ராதா சிங் (32). இவர் தனது ஃபேஸ்புக் ஐடியில் இருந்து, ஒரு சிறுமியின் புகைப்படத்தை அவரது செல்போன் எண்ணுடன் பகிர்ந்து, ‘ரூ.2,500’ என்ற வாசகத்துடன் இழிவாகப் பதிவிட்டிருந்தார். மேலும் அந்த சிறுமியின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு ராதா சிங், சில அவதூறான மெசேஜ்களையும் அனுப்பியதாக தெரிகிறது. இதையடுத்து ராதா சிங் மீது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து, அவரை அகமதாபாத் சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், முன்பு தான் டெல்லியில் வசித்து வந்ததாகவும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அகமதாபாத்திற்கு குடிபெயர்ந்ததாகவும் ராதா சிங் தெரிவித்தார். அகமதாபாத்தில் அந்த சிறுமியின் தந்தையுடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். அதன்பின் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இதையடுத்து அவரை பழிவாங்கும் வகையில் அவரது மகளின் புகைப்படத்தை எடுத்து ஃபேஸ்புக்கில் ராதா சிங் அவதூறாகப் பதிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

3 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

”குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்”: பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்

குளிர்காலம் முடிவில் எரிபொருள் விலை குறையும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக, வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல்,…
Central-government-Corona-Extension-until-March-31st
Read More

கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிப்புமத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, நாடு கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அடுத்த மாதம் (மார்ச்) 31-ந் தேதி…
Read More

“அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்!” சசிகலா அறிவிப்பு..

“அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்.. தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்” என்று, சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்ரை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் அதிமுகவுடன்…
Read More

முச்சக்கர வண்டி சாரதியை இலக்கு வைத்து நூதன கொள்ளை!

யாழில்.பெண் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கொள்ளை கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில்…
Read More

குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது! – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – மணியந்தோட்டத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண்…
Read More

நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!

நைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி…