விஜய்யின் ‘தளபதி 65’ படத்தில் சிவகார்த்திகேயன்?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. நெல்சன் இயக்கும் படங்களில் சிவகார்த்திகேயன் பாடல்களை எழுதி வருகிறார். அந்தப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி வருகின்றன.

அந்தவகையில் கோலமாவு கோகிலா படத்தில் ‘கல்யாண வயசு’ பாடல், டாக்டர் படத்தில் ‘செல்லம்மா’, ‘சோ பேபி’ ஆகிய பாடல்களின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.

ஆகையால், நெல்சன் அடுத்ததாக இயக்கும் தளபதி 65 படத்திற்கும் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுத உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

ரசிகர்களை அலர்ட் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் !

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா,குமரன்,வெங்கட்,ஹேமா,சித்ரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி…