“அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்!” சசிகலா அறிவிப்பு..

“அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்.. தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்” என்று, சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்ரை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் அதிமுகவுடன் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சு வார்த்தையில் அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈடுபட்டு இருந்தார். அப்போது, சசிகலாவை அதிமுக வில் இணைப்பது தொடர்பாக அமித்ஷா பேசியதாகத் தகவல்கள் வெளியானது.

குறிப்பாக, அதிமுக தலைமையிடம் ஒருமித்த கருத்து இல்லை என்றும், முக்கியமாக இபிஎஸ் – ஓபிஎஸ் உடனான பேச்சு வார்த்தையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால், சசிகலாவை அதிமுக வில் இணைப்பது தொடர்பான விசயம் வெற்றி பெறவில்லை என்றும் கூறப்பட்டது.

தற்போது அதன் தொடர்ச்சியாக, “அரசியலிலிருந்து விலகுவதாக” சசிகலா உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிக்கையில், “நான் என்றும் வணங்கும் ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் நாட்டில், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று ஜெயலலிதா நமக்குக் காட்டிய திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழ் நாட்டில் நிலவிட ஜெயலலிதாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

மேலும், “என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள்” என்றும், மிகவும் உருக்கமான அந்த அறிக்கையில் அவர் கூறியிருக்கிறார்.

“ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித் தான் நான் இருக்கிறேன் என்றும், நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை” என்றும், சசிகலா தெரிவித்து உள்ளார்.

“ஜெயலலிதாவின் அன்புத் தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் ஜெயலலிதாவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்” என்றும், மிகவும் உருக்கமாக அந்த அறிக்கையில் சசிகலா தெரிவித்து உள்ளார்.

இதனால், தமிழக அரசியலில் எதிர்பார்க்காத திடீர் திருப்பமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது! – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – மணியந்தோட்டத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண்…
Read More

காதல் தோல்வியின் ஓராண்டு பூர்த்தியை கேக் வெட்டி வெகு விமர்சையாக கொண்டாடிய இளைஞன்

நண்பனின் காதல் தோல்வியின் ஓராண்டு பூர்த்தியை கேக் வெட்டி வெகு விமர்சையாக கொண்டாடிய இளைஞர்கள். இது பற்றி அந்த இளைஞனின் நண்பர் ஒருவர் முகநூலில்…
Read More

ராக்கெட் வெற்றிகரமாக பறக்க வேண்டி திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் சிவன்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கைக்…
Read More

விவாகரத்தை அறிவித்த பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ்

மைக்ரோசாப்ட்டின் சக உரிமையாளர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் திருமணமான 27 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற போவதாக அறிவித்துள்ளனர்.…
india-alien
Read More

இந்தியாவுக்குள் நுழைந்த ஏலியன்கள்? வெளியான அதிர்ச்சி வீடியோ!

பஞ்சாப் மாநிலத்தில் வானில் அடையாளம் தெரியாத பொருள் பறந்துசென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அடையாளம் தெரியாத பொருள் வானில் பறந்து சென்றது…
Read More

இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி ஆரம்பம்

இலங்கை பாரதிய ஜனதா கட்சி எனும் பெயரில் புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…