ரசிகர்களை அலர்ட் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் !

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா,குமரன்,வெங்கட்,ஹேமா,சித்ரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் பெற்று வருகிறது.

இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த சித்ரா சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சித்ராவிற்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தங்கள் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கினர்.சித்ரா நடித்துவந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடித்துவருகிறார்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்று வருகின்றன.

இந்த தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தவர் குமரன்.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.தற்போது குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார் , அதில் தான் facebook பக்கத்தில் இருந்து பலருக்கும் மெசேஜ்கள் வருவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்,நான் facebook பக்கத்தில் அவ்வளவு ஆக்டிவ் கிடையாது ரசிகர்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்று குமரன் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.மேலும் இதுகுறித்து புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

42 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

விஜய்யின் ‘தளபதி 65’ படத்தில் சிவகார்த்திகேயன்?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன்…
Read More

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் விவேக் காலமானார்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது…