இலங்கையில் கடைவிரிக்கும் ஆன்லைன் திருட்டுக்கள் – படங்கள் இணைப்பு

woman-held-for-posting-girl-picture-with-price-tag-on-social-media

அண்மைக்காலமாக Facebook whatsapp மூலம் தொடர்பு கொண்டு குறுகிய காலத்துக்குள்ளேயே மிக நெருக்கமாக காதலோடு அக்கறையோடு உங்களுக்கு எது பிடிக்குமோ அதை பேசி, உங்களை நம்பவைத்து தான் வெளிநாட்டில் இருக்கிறேன், உங்கள் இனி நாட்டில் குடியேற விரும்புகிறேன் அங்கு காணி வாங்கி வீடு கட்டி நிரந்தரமாக தங்க யோதிருக்கிறேன், அங்கு ஒரு வியாபாரத்தை தொடங்க நினைக்கிறேன் உன்மடியில் சாகும்வரை இன்பமாய் வாழ நினைக்கிறேன், எம் பிள்ளைகளுக்காய் அங்கு அழகான ஒரு இடத்தை உருவாக்குவோம் என்றெல்லாம் காதல்வசனங்கள் பேசி இங்கு நமது மாஃபியா கிங்குகளையே நம்பவைத்து, கிறங்க வைத்து, காணி/வீடு என்ன விலைவரும் என்றெல்லாம் நம்பும்படி விசாரித்து, எனது சேமிப்பை உன்னை நம்பி இவற்றை வாங்க அனுப்புகிறேன் நான் வருமுன் வாங்கி வைக்கமுடியுமா என அழகாக பட்டர் பூசி, உனக்கு என்ன வேறு வாங்கி அனுப்ப என்று கேட்டு அண்ணாச்சியின் அந்த லிஸ்டயும் வாங்கி, காசு ஒன்றரை லட்சம் டாலர்ஸ், நீ கேட்டபடி iphone 2, Headphone, உனக்கு shirts, shoe என்னுடைய கல்விப்பத்திரங்கள், உடுப்புகள், எனது பெற்றோரின் சொத்துப்பத்திரங்கள் இவற்றை ஒரு பார்சலாக அனுப்புகிறேன். நான் எயார்போட் திறந்ததும் அங்கு வர இருக்கிறேன் நிரந்தரமாக உன்னுடன் தங்கவென என்று நாளும் பொழுதும் கவிதைகதைகள் பேசி உங்களை நம்ப வைத்து விடுவதில் ஜகஜால கில்லாடிகளாக இந்த பெண்கள் உள்ளார்கள்.

அநேகமானோர்க்கு தான் இராணுவத்தில் போர் நடக்கும் இடத்தில் இருக்கிறேன். இங்கு வங்கிகள் பூட்டு அதனால் தான் அவ்வாறு ஆடைகளுக்கு பதுக்கி காசை அனுப்புகிறேன் என சொல்லியிருக்கிறாள் அந்த பெண்.


நாம் நமது காசு இழக்கவில்லையே பிறகென்ன நமக்குதானே காசு கிடைக்கிறது வந்தாளே நமக்கென ஒரு அதிஷ்டதேவதை என்று கனவுகளோடு கதையில் மயங்கி நீங்கள் காத்திருக்க, பார்சல் வந்துவிட்டது என உங்களுக்கு காஃல் வரும். உங்கள் பார்சல் வந்துவிட்டது ஆனால் கிளியறன்ஸ் போது சுங்க அதிகாரிகள் அந்த பார்சலுக்குள் நிறைய டொலர்ஸ் இருந்ததை கண்டு பிடித்துவிட்டார்கள் என்று கூறி அதனால் எல்லாவற்றுக்கும் இப்போது நீங்கள் சுங்கவரி கட்டி பார்சலை பெற்றுக்கொள்ளுங்கள் என சொல்லி ஒன்றரைலட்சம் சுங்கப்பணத்தை வங்கியில் கட்டசொல்லி இலங்கையிலுள்ள குரியர்கம்பனி( Telephone number, website letter head எல்லாம் கூட உள்ள fake courier company) வங்கிக்கணக்கை தரும். நீங்கள் பதறி பயந்துபோய் அந்த பெண்ணிடம் சொன்னால் அவள் ஐயோ எண்ட சேமிப்பெல்லாம் துலையப்போகுதே என்று கண்ணீர் விட்டு கதறி அழுவாள். அதற்குள் ஒன்றரை லட்சம் டாலர்ஸ் இருக்கிறது நீ அந்த காசில் பிறகு எடுத்து கொள்ளலாம் தானே எப்படியாவது காசை கட்டி வெளியே பார்சலை எடு என்பாள்
நீங்களும் என்ன செய்வது என்று தெரியாது பிரச்சனை பெருசாகாது பார்சலை வெளியே எடுப்போம் என காசை கட்டுவீர்கள். அவ்வளவுதான் காசு, காதலி, பார்சல், குறியர்கம்பனி, எல்லாம் காணாமல் போகும்🤷‍♀️


பலர் பாதிக்கப்பட்டு விட்டார்கள் உங்கள் நண்பர்கள் உறவினர்க்கு இதை குறித்து எச்சரியுங்கள்.
இது பலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இணைந்து செய்யும் கமிஷன் அடிப்படையிலான very well organized crime. வீணாக மாட்டிக்கொள்ளாதீர்கள்.❤

Via – Nivetha Sathiyan

16 Shares:
2 comments
  1. இந்த கணக்கு இலக்கத்தை வைத்து அவர்களை பிடிக்க முடியாதா

    1. முடியும். ஆனால் அவர்கள் வெறுமனே கமிஷனுக்கு வேலை செய்பவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

கொரோனாவால் இறந்த முஸ்லீம்களின் உடலை இரணைதீவில் புதைப்பதற்கு திட்டம்

COVID-19 ஆள் இறந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்லா தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை…
Read More

இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி ஆரம்பம்

இலங்கை பாரதிய ஜனதா கட்சி எனும் பெயரில் புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…
india-alien
Read More

இந்தியாவுக்குள் நுழைந்த ஏலியன்கள்? வெளியான அதிர்ச்சி வீடியோ!

பஞ்சாப் மாநிலத்தில் வானில் அடையாளம் தெரியாத பொருள் பறந்துசென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அடையாளம் தெரியாத பொருள் வானில் பறந்து சென்றது…
Read More

”குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்”: பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்

குளிர்காலம் முடிவில் எரிபொருள் விலை குறையும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக, வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல்,…
Read More

புதிதாக வாகனங்களை கொள்வனவு செய்யக் காத்திருப்போருக்கு ஓர் நற்செய்தி.!! சற்று முன்னர் வெளியான தகவல்..!

தற்போது உயர்ந்துள்ள வாகனங்களின் விலை அடுத்த வாரத்தின் பின்னரான காலப்பகுதியில் ஓரளவு குறையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின்…
Read More

ராக்கெட் வெற்றிகரமாக பறக்க வேண்டி திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் சிவன்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கைக்…