2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுபவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ள பரீட்சார்த்திகளுக்கு, பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
நடைபெற்றுவ்சரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில் , பரீட்சை நிறைவடைந்தவுடன் அமைதியான முறையில் கலைந்துச் செல்லுமாறு, பரீட்சைகள் திணைக்களம் பரீட்சார்த்திகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதாவது, பரீட்சை முடிந்தவுடன் பரீட்சை நிலையங்களிலோ அல்லது பரீட்சை நிலைய வளாகத்திலோ அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுதல், ஏனைய பரீட்சார்த்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுதல் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டால், பரீட்சை சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்படும் என, திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இவ்வாறு செயற்படுவோரின் பரீட்சைப் பெறுபேறுகளை இரத்துச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

14 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

இனி வாகன வரி அனுமதிப் பத்திரத்தை ATM தன்னியக்க இயந்திரம் மூலமாகப் பெற்றுக் கொள்ள முடியும்

வாகன வரி அனுமதிப் பத்திரத்தை ATM தன்னியக்க இயந்திரம் மூலமாகப் பெற்றுக் கொள்ளும் முறையை எமது வடக்கு மாகாண சபை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான…