முச்சக்கர வண்டி சாரதியை இலக்கு வைத்து நூதன கொள்ளை!

யாழில்.பெண் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கொள்ளை கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது.

இது குறித்து தெரிய வருவதாவது,

யாழ்.புறநகர் பகுதிகளான காக்கை தீவு , பொம்மைவெளி , ஓட்டுமட பகுதிகளில் வீதியில் நிற்கும் பெண் ஒருவர் வீதியால் வரும் முச்சக்கர வண்டிகளை மறித்து நகர் பகுதிக்கு செல்ல வேண்டும் என முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்துவார்.

பின்னர் பொம்மை வெளி பகுதியில் தனது உறவினர் வீடு ஒன்று உள்ளதாகவும் , அங்கு முதலில் சென்று விட்டு நகருக்கு செல்வோம் என கூறி பொம்மை வெளி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அழைத்து செல்வர்.

அங்கு சென்றதும் அவர் முதலில் அந்த வீட்டிற்குள் சென்று விட்டு , சில நிமிடத்தில் ஏதேனும் காரணம் கூறி முச்சக்கர வண்டி சாரதியையும் வீட்டிற்குள் அழைப்பார். சாரதி வீட்டிற்குள் சென்றதும் வீட்டினுள் இருக்கும் இளைஞர்கள் , சாரதி அந்த பெண்ணுடன் தவறான நோக்குடன் நடந்து கொள்வதற்கு வீட்டினுள் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டி சாரதியை மிரட்டி பணத்தினை கொள்ளையிடுவார்கள்.

இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இவ்வாறு ஓர் முச்சக்கர வண்டி சாரதியை வீட்டினுள் அழைத்து சென்று அங்கிருந்த இளைஞர்கள் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டு அவரது தங்க சங்கிலி மற்றும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணம் என்பவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

இது தொடர்பில் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்காக பாதிக்கப்பட்ட சாரதி சென்றிருந்த போது , அங்கிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தனது தொலைபேசியில் கொள்ளை கும்பலின் புகைப்படங்களை காட்டி இவர்களா ? கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் என வினாவியுள்ளார். அவர் அவர்களை அடையாளம் காட்டிய பின்னர், அவரின் தொடர்பு இலக்கத்தை பெற்ற பின்னர் முறைப்பாடுகள் எதனையும் பதியாது. பாதிக்கப்பட்ட நபரை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் கோரியுள்ளார்.

22 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

“அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்!” சசிகலா அறிவிப்பு..

“அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்.. தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்” என்று, சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்ரை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் அதிமுகவுடன்…
Read More

புதிதாக வாகனங்களை கொள்வனவு செய்யக் காத்திருப்போருக்கு ஓர் நற்செய்தி.!! சற்று முன்னர் வெளியான தகவல்..!

தற்போது உயர்ந்துள்ள வாகனங்களின் விலை அடுத்த வாரத்தின் பின்னரான காலப்பகுதியில் ஓரளவு குறையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின்…
Read More

ராக்கெட் வெற்றிகரமாக பறக்க வேண்டி திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் சிவன்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கைக்…
woman-held-for-posting-girl-picture-with-price-tag-on-social-media
Read More

இலங்கையில் கடைவிரிக்கும் ஆன்லைன் திருட்டுக்கள் – படங்கள் இணைப்பு

அண்மைக்காலமாக Facebook whatsapp மூலம் தொடர்பு கொண்டு குறுகிய காலத்துக்குள்ளேயே மிக நெருக்கமாக காதலோடு அக்கறையோடு உங்களுக்கு எது பிடிக்குமோ அதை பேசி, உங்களை…
Read More

கொரோனாவால் இறந்த முஸ்லீம்களின் உடலை இரணைதீவில் புதைப்பதற்கு திட்டம்

COVID-19 ஆள் இறந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்லா தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை…
Read More

இந்தியாவின் மிகப்பெரிய இலவச சிறுநீரக டயாலிசிஸ் மையம் டெல்லியில் தொடங்கப்பட்டது

டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு இந்தியாவின் மிகப்பெரிய இலவச சிறுநீரக டயாலிசிஸ் மையத்தை பங்களா சாஹிப் குருத்வாராவில் ‘பில்லிங் மையம்’ இல்லாமல் அமைத்துள்ளது!…