இனி வாகன வரி அனுமதிப் பத்திரத்தை ATM தன்னியக்க இயந்திரம் மூலமாகப் பெற்றுக் கொள்ள முடியும்

வாகன வரி அனுமதிப் பத்திரத்தை ATM தன்னியக்க இயந்திரம் மூலமாகப் பெற்றுக் கொள்ளும் முறையை எமது வடக்கு மாகாண சபை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கான இயந்திரம் கைதடியில் வடக்கு மாகாண சபையின் தலைமைச் செயலகம் முன்பாக உள்ளது.
எமது நாட்டிலுள்ள மாகாண சபைகளின் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களங்களின் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களது உரிமையாளர்களும் இந்த இயந்திரத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாகன வரி அனுமதிப்பத்திரத்தைப் பெறும் பொறி முறை.
01.நீங்கள் உபயோகிக்கும் வாகனத்தின் பதிவுப் புத்தகம், தற்போதைய வாகன வரி அனுமதிப்பத்திரம்,செல்லுபடியான காப்புறுதிப் பத்திரம்,Eco Test புகைப் பரிசோதனை அறிக்கை,கட்டணம் செலுத்துவதற்கு தயாராக Visa card, Master Card ஆகியவற்றைக் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
02. நீங்கள் வாகன வரி அனுமதிப் பத்திரம் வழங்கும் தன்னியக்க இயந்திரமுள்ள அறையினுள் செல்லுதல் வேண்டும்.
03. அங்குள்ள இணைப்பின் மூலமாக உங்களது மின்னஞ்சல்(e.mail), கடவுச் சீட்டை( Pass word) ரைப் செய்து Login செய்து கொள்ளல் வேண்டும். இதன் மூலமாக உரிய தரவுத் தளத்தினுள் பிரவேசிக்க முடியும்.
04. வாகன வரி அனுமதிப் பத்திர தரவுத் தளத்தினுள் பிரவேசித்து முதலில் உரிய இடத்தில் உங்களது வாகன இலக்கத்தைப் பதிவு செய்தல் வேண்டும்.
பின்னர் செசி (Chesi )இலக்கத்தைப் பதிவு செய்தல் வேண்டும். ஆங்கில எழுத்து கப்பிட்டல், சிமோல் பார்த்துச் சரியாகப் பதிதல் வேண்டும்.
பின்னர் கைவசமுள்ள வாகன வரி அனுமதிப் பத்திரத்தின் தொடர் இலக்கத்தைப் பதிவு செய்தல் வேண்டும்.
04. உங்களது வாகனத்திற்கு மிக அண்மையில் வெற்றிகரமாகப் புகைப் பரிசோதனை செய்த கம்பனியின் பெயரைக் கிளிக் செய்ய வேண்டும்.
காப்புறுதி செய்து அட்டை வைத்திருக்கும் கம்பனியின் பெயரைக் கிளிக் செய்ய வேண்டும். இதன் மூலமாகக் குறித்த கம்பனிகளது தரவுத் தளம் மூலமாக உங்களது சான்றிதழ்களின் உண்மைத் தன்மை தன்னியக்கமாக உறுதி செய்து கொள்ளப்படும்.
05. படிமுறைகள் யாவும் சரியாயின் உங்களது Visa Card அல்லது Master Card மூலமாக வாகன வரி அனுமதிப் பத்திரத்தின் கட்டணத்தைச் செலுத்தலாம்.
மோட்டார் சைக்கிள் ஆயின் தண்டப்பணம் ஏதுமில்லாமல் 700 ரூபா கட்டணம். அத்துடன் Visa Card அல்லது Master Card விநியோகித்த வங்கிக்கு சேவைக் கட்டணமாக வாகன வரி அனுமதிப் பத்திரக் கட்டணம் 700 ரூபாவின் 2.5 வீதம் 18 ரூபா, வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வாகன வரி அனுமதிப் பத்திரத்தைத் தபால் மூலமாக வீட்டிற்கு அனுப்புவதற்கான தபால் கட்டணம் 50 ஆகியவை கழிக்கப்பட்டு விடும்.
அதாவது 767 ரூபா Visa Card அல்லது Master Card இலிருந்து கழிக்கப்பட்டு விடும்.
வாகனங்களது தன்மைக்கேற்ப வரி அனுமதிப் பத்திரக் கட்டணம் வரும்.
06. இவ்வாறு 767 ரூபா கழிக்கப்பட்டவுடன் தன்னியக்க இயந்திரத்திலிருந்து தற்காலிகமாகப் பாவிக்கக் கூடிய வாகன வரி அனுமதிப் பத்திரம் ஒன்றின் பிரதி வெளியே வரும்.அதனை எடுத்துப் பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்.
இந்த தற்காலிக வாகன வரி அனுமதிப் பத்திரம் ஒரு மாதத்திற்குச் செல்லுபடியாகும்.
07. ஏரிஎம் இயந்திரத்தின் மூலமாக வாகன வரி அனுமதிப் பத்திரத்துக்கான படி முறைகள் யாவற்றையும் வெற்றிகரமாக நிறைவு செய்தால் 2 வாரத்தினுள் வாகனப் பதிவுப் புத்தகத்தில் உள்ள முகவரிக்கு வாகன வரி அனுமதிப் பத்திரத்தின் மூலப் பிரதி பதிவுத் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
08. மேலதிக விபரங்களுக்கு 021 221 6695. ,0779137431 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
வேதநாயகம் தபேந்திரன்
21.04.2021

1 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுபவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ள பரீட்சார்த்திகளுக்கு, பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. நடைபெற்றுவ்சரும் க.பொ.த சாதாரண தரப்…