இலங்கை பாரதிய ஜனதா கட்சி எனும் பெயரில் புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை கட்சியின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் வீ.முத்துசாமி வெளியிட்டுள்ளார்.
கட்சி அறிக்கை வருமாறு,
இதேவேளை முத்துசாமி கருத்து தெரிவிக்கையில்,
“பாரதிய ஜனதா என்ற சொல்லுக்கு என்ன அர்த்தமென்றே தெரியாது. பெயர் நன்றாக இருந்தது. அதனால் தான் அந்த சொல்லை பயன்படுத்தினோம். அந்த சொல் எந்த மொழி என்று கூட எமக்கு தெரியாது.
எமது கட்சிக்கும், இந்திய பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. எமது கட்சியை ஆறு மாதத்திற்கு முன் ஆரம்பித்தோம். இந்திய பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்பு என ஊடகங்களில் செய்தி வெளியானமையால் 1500 க்கும் மேற்பட்டவர்கள் கட்சியின் தொடர்பை துண்டித்துக்கொண்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.